Saturday, July 26, 2025

பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும்





          பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும் நூல் வெளியீட்டு விழா மதுரை MUTA Hall-இல் நடைபெற்றது. PUCL ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் இரா.முரளி நூலை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் த.அறம் நூலை வெளியிட்டு உரை ஆற்றினார். பியுசிஎல் மூத்த உறுப்பினர் நடராசன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், AIPSN இராஜமாணிக்கம், சமூக செயல்பாட்டாளர் தோழர் குமரன், எழுத்தாளர் கோணங்கி, கதவு பதிப்பகம் தோழர் மதிகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாவட்டப் பொருளாளர் பி.கண்மணி நன்றியுரை கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, January 23, 2025

நூல் விமர்சன அரங்கம்

2025 ஜனவரி 19ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் கதவு பதிப்பகம் நூலங்காடியில் புத்தக விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவுப் பேராசிரியர் திருமிகு சுகன்யா தேவி தலைமை தாங்கினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மானமிகு வெ.முரளி முன்னிலை வகித்தார்.

மாவிபக’வின் தோழர் அஷ்ரஃப்தீன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.

செழியனின் உலக சினிமா நூலை தோழர் கேகே அறிமுகப்படுத்தினார்.

மதிகண்ணனின் ‘விரிவாக்கப்பகுதி’ கணினி சொன்ன கதைகள் நூல் குறித்து, எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ந.முருகேசபாண்டியன் உரையாடலும் கலந்துரையாடலும் நடத்தினார். அவருடைய உரை வெறுமனே கதைகள் குறித்ததாக மட்டும் இல்லாமல் கதைகள் முன்வைக்கும் கருத்தியல் தொடர்பானதாகவும் இருந்தது மற்றவர்களையும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் செய்தது. கலந்துரையாடலில் மானமிகு விடுதலை ஆதவன், திருமிகு குருசாமி, தோழர் மூர்த்தி, திருமிகு ஜெயராம், தோழர் சு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை செழுமைப்படுத்தினர்.

இந்தக் கதைகளில் கதை சொல்வதைத் தாண்டியும் கதைகளின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகள் முக்கியமானதாகப்பட்டதால் கதைகளின் நகர்வே கேள்விகளை மையப்படுத்தியதாகவே இருந்தது என்ற பொருண்மையில் நூலாசிரியர் தோழர் மதிகண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார்.

25 பேர்வரை கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் நடிப்புச் சுதேசிகளின் பொறுப்பாளர் தோழர் முனியசாமி நன்றி கூறினார்.

Wednesday, January 22, 2025

புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான்.

 


அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும்... வணக்கம்

இந்த வலைப்பூ உங்களுக்குப் புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான்.  சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும்.

கதவு மின்னிதழ் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் 

கதவு பதிப்பகத்தின் வலைப்பூ இப்போது

இங்கு நூல்கள் தொடர்பானவை மட்டுமன்றி

கலை இலக்கியத்திற்கான தளமாக இதனைப் பயன்படுத்தலாம்.

நண்பர்களும் தோழர்களும் எழுத்தாளர்களும் கதவு பதிப்பகம் வலைப்பூவிற்கு எழுதலாம்.

தங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தொடர்வோம் தோழமையுடன்

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்