தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Monday, August 8, 2011

வாக்குமூலம் – அருணோதயம்


விதவையோ, முதிர்கன்னியோ
திருமணம் புரிந்தேனில்லை.

பணமோ, நகையோ
வரதட்சனை மறுத்ததில்லை.

அனாதையோ, அகதியோ
ஒருவேளை அன்னம் இட்டதில்லை.

பஞ்சையோ, பராரியோ
மாற்றுடுப்பு தந்ததில்லை.

உறவினனோ, நண்பனோ
உதவியாய் ஆயிரம், ஐநூறு கொடுத்ததில்லை.

அக்காளோ, தங்கையோ
கஷ்டப்பட்டுக் கரைசேர்த்ததில்லை.

ஆனால்,
இத்தனையும் செய்தவன்போல்
இலக்கியம் செய்வதுண்டு.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் நடைபெற்ற மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment