Monday, November 24, 2014

2014-11-22 சில காட்சிப் பதிவுகள்

2014 நவம்பர் 22 ஆம் நாள் மாலை நடைபெற்ற படைப்பரங்கம் மற்றும் விமர்சன அரங்கின் காட்சிப் பதிவுகளில் சில...
விமர்சன அரங்கக் கட்டுரைகளும்
படைப்பரங்கின் படைப்புகளும் விரைவில் வலையேற்றப்படும்.






















 
























Saturday, November 15, 2014

கலந்துரையாடல் - கடிதம் 8 - பாரதி சே

தோழர் மதிகண்ணன் அவர்களுக்கு
தம்பி இரமேஷ் எழுதுவது.
இங்கு வேலைப்பளு மற்றும் பணிக்கான தேடுதல்பளு காரணமாக குறித்த நேரத்தில் பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
தாங்கள் பதிவுசெய்த தலைப்புக்குப் பொருந்தி வருவது முதலும் முடிவும்தான். நடுப்பகுதி என்னவோ பொதுக்கருத்தைத் துரத்த ஆரம்பித்து, பின் மீண்டும் இணைக்கப்பட்டது போன்ற உணர்வு. மேலும் தாங்கள் "கருத்து மற்றும் பொருள் முதல் வாதக்கோட்பாடு"களை முன்வைத்து சொல்லவரும் கருத்தாழம், அதன் பொருள் புரியாததால் எனக்கு விளங்கவில்லை. அதனைப் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

கலந்துரையாடல் – கடிதம் 7 - கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி

அன்புத் தோழமைக்கு ஸ்ரீபதி
சிறுவயது முதலே ஒவ்வொன்றை பற்றிய வினாக்கள் நம்முள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. அனைத்திற்குமான விடைகள் கிடைப்பதில்லை. இருந்தபோதும் அந்த வினாக்கள் நம்மை விடாது துரத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிவதையும், தெரிவதையும், புரிவதையும் தேடித்தேடி மனது ஓடிக் கொண்டே இருக்கிறது.
விடைகளைக் காண முயலும் வேட்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைத்தான் நம்ப வேண்டியுள்ளது. அவர்களது அறிவுக்கும் அனுபவத்திற்கும் தக்கன நமக்கு விடைகள் கிடைக்கின்றன. இந்த விடைகள் எல்லாம் சரியானவைதானா? என்ற தெளிவை பல்வேறு மனிதர்கள் தரும் விடைகள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மனது ஏற்றுக் கொள்ளுகிறது.
ஒரு கட்டத்திற்குப் பிறகு நமது வாசிப்பு விசாலப்படும்போது நாம்

Wednesday, November 12, 2014

கலந்துரையாடல் – கடிதம் 6 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … செல்வா

அன்புத் தோழமைக்கு அன்புடன் செல்வா
-    பாவ புண்ணியம்
-    தலைப்பைப் பார்த்தவுடனே பயந்துட்டேன்...
-    எங்க கண்ணதாசன் மாதிரி ஏதும் எழுத ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நினைச்சுட்டேன்.
-     
பாவ புண்ணியம் பத்தி கவலைப்படும் இறை நம்பிக்கையாளனுக்கு எது சரின்னு ஒரு ‘பைபிள்‘ இருக்கு. எந்தப் பாவம் செஞ்சாலும் அதுக்கு ஒரு பரிகாரமும் வைத்திருப்பார்கள். இறை நம்பிக்கை இல்லாதவனுக்கு பரிகாரத்துக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது போங்க...

கலந்துரையாடல் – கடிதம் 5 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … விஜி

அன்புத் தோழமைக்கு வணக்கத்துடன் விஜி

பாவம் புண்ணியம் கருத்தாக்கம் குறித்த தங்கள் (தோழர் மதிகண்ணனின்) டிதம் கண்டேன். பாவ புண்ணிய கருத்துருவாக்கம் செயல்தளத்தில் நீர்த்துப் போய் அவரவர் வசதி தேவைக்கேற்ப அவற்றை வளைத்துக் கொள்வதாய் சூழல் மாறியுள்ள போதிலும்கூட இன்னமும் கருத்தியல் தளத்தில் அவை வலுவாகவே வேரூண்றி நிற்கின்றன. தனிமனிதன் தனது செயல்பாடுகளில் பாவ புண்ணியத்தைக் கருதவில்லை எனினும் சமூகமாகச் செயல்படும் சூழலில் பெயரளவிலாவது அவற்றைக் கைக்கொண்டே வருகிறான்.

அதே நேரத்தில் பாவ புண்ணியக் கருத்தாக்கங்களுக்கு இறையோடு இருந்த தொடர்பு

Monday, November 10, 2014

கலந்துரையாடல் – கடிதம் 4 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … சுப்புராயுலு

அன்புத் தோழமைக்கு

வணக்கத்துடன் சுப்புராயுலு

இறைமறுப்பு, இறைநம்பிக்கை என்ற எதிர்வுகள் நம் வரலாற்றில் தொடர்ந்து வருவதான இருவேறு போக்குகள் இதுவரையிலும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளர்கள், அதிகாரத்திற்குட்பட்டவர்களை இத்தகைய எதிர்வுகளை விதைத்து அவர்களின் சம்மதத்தோடு ஆட்சியில் நிரந்தரமாக நீடிப்பதற்கான ஒரு உத்தியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தங்களிடம் உள்ள கருத்தியல் சாதனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து உருவாக்கிக் கொண்டும், வளர்த்துக் கொண்டுமிருக்கிறார்கள்.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் ஊடேதான் தொடர்ந்திருக்கிறது என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். ஆனால் நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு என்பது திட்டமிட்டே, உண்மைகளை

கலந்துரையாடல் – கடிதம் 3 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … கருப்பு

அன்புத் தோழமைக்கு

வணக்கத்துடன் கருப்பு

இதுபோன்ற பகிர்தலைத்தான் ஒருவருடம் முன்பு முன்வைத்தேன். (அதாவது படித்தவற்றைப் பகிர்வது அல்லது ஒரு தலைப்பின் கீழ் எழுதி அதைப் பகிர்வது) அது சில நடைமுறைச் சிக்கல்களால் இரண்டு கூட்டங்களுடன் நின்று போனது. தற்போது அதைவிட கூர்மையான கேள்விகளுடன் உங்களது (தோழர் மதியின்) கடிதம் கிடைத்தது. இம் முயற்சி தொடரவேண்டும்.

கடிதத்திற்குள்

Sunday, November 9, 2014

கலந்துரையாடல் – கடிதம் 2 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … கேகே


அன்புத் தோழமைக்கு அன்புடன் கேகே

சில முக்கியமான விஷயங்களை நினைவூட்டுவதாக / கவனமூட்டுவதாக அமைந்தது தோழர் மதிகண்ணனின் கடிதம். இக்கடிதம் அக்கடிதத்திற்கு நேரடியாய் தொடர்பற்றதாய் இருக்கலாம். ஆனாலும் ஒரு கிளையில் சந்திக்கும் என நம்புகிறேன்.

1980-கள் வரைக்குமான பகுத்தறிவு (முற்போக்கு) என்பது (பொதுப்புத்தியினடிப்படையில்) கிளிஜோஸ்யக்காரனை கடுமையாகச் சாடுவது என்ற அளவில் மட்டுமே நின்றுவிடும். உலகளாவிய கண்ணோட்டத்துடன் பரந்த அளவிலான கல்வியறிவு பெற்று வளர்ந்த, சென்ற தலைமுறையினர் (குறிப்பாக 60-களுக்குப்பிறகு) நாகரீகம் பெற்றவர்களாகத் தங்களைக் கருதியதுடன், முற்போக்காக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் என்றும்கூட நினைத்து வந்தார்கள். மதமாச்சர்யங்களை எதிர்த்தல்; சடங்குகளைப் புறக்கணித்தல்; நாகரீகமாக நடந்து கொள்ளுதல் என்கிற இவர்களது முற்போக்கு முலாம் என்பது மேற்சொன்னபடி கிளிஜோஸ்யக்காரனைத் திட்டுவது,

கலந்துரையாடல் - கடிதம் 1 - பாவபுண்ணியம் – மதிகண்ணன்

          அன்புத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்.


          வெறிநாயாய் விரட்டும் வாழ்க்கையின் ஒட்டத்தில் நாம் சந்திக்கின்ற நேரமும் கால இடைவெளியும் குறைந்து வருகின்றன. ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் முயற்சி குறையவில்லை.

          இதனைத் தொடரும் கடிதத்தில் ஒரு கலந்துரையாடலுக்கான தொடக்கப்புள்ளியைத் தொட்டிருக்கிறேன். இது போன்ற உரையாடல்களைத் தொடர நினைக்கின்றேன். தாங்களும் அதுபோல் நினைத்தால், எழுத்தில் எதிர்வினையாற்றுங்கள்.