Tuesday, November 11, 2025

பிரெடரிக் எங்கெல்ஸின் நூல் வெளியீடு

 மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு


பிரெடரிக் எங்கெல்ஸின் The part played by Labor in the Transition from Ape to Man என்ற நூல் தோழர் நிலா விழியனால் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருவமாறியதில் உழைப்பின் பங்கு என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டு நிகழ்வு சிவகாசி ஆலம் கலை, கல்வி, நாகரிக மையத்தில் நடைபெற்றது. நிகழ்வு சிவகாசி எழுத்தாளர் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. 

நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருத்துவர் த.அறம் அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 



தோழர் ஸ்மைலி செய்யது வரவேற்றார்.


நூலை சிவகாசி எழுத்தாளர் குழுமத்தின் தோழர் மணிமாதவி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

நூல் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் தோழர் முனைவர் சாந்தி செல்வராஜ் அவர்கள் விரிவாக உரையாற்றினார்.


தொடர்ந்து மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தோழர் விஜியும் தோழர் கேகேயும் உரையாற்றினர்.


சிவகாசி எழுத்தாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பா. சரவணகாந்த் நூலின் தமிழாக்கம் குறித்து உணர்வுரையாற்றினார்.


நூலின் மொழிபெயர்ப்பாளர் தோழர் நிலா விழியன் ஏற்புரையாற்றினார்.


கதவு பதிப்பகத்தின் தோழர் அஸ்ரஃப்தீன் அவருக்கே உரித்தான தனித்துவ நடையில் நன்றியுரையாற்றினார்.


ஒட்டு மொத்த நிகழ்வையும் சிறிதும் தொய்வின்றி உரையிடையிட்ட சிற்றுரைகளுடன் தோழர் சுதா ஒருங்கிணைத்தார்.

Monday, November 3, 2025

வாய்ப்பிருப்போர் வருக...

 


*தோழர் ஏங்கல்ஸ் ‘Die drel Grandforemen der Knechhishaft - Outline of the General Plan’ (பொதுத்திட்டத்தின் வரைபடம்) என்ற தலைப்பில் ஒரு பெரும்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். ‘The Part played by Labour in the Transition from Ape to Man’ என்ற இந்தக் கட்டுரை அந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும் விருப்பத்துடன் எழுதப்பட்டது. அவர் அந்தப் பெரும்படைப்பை எழுதி முடிக்கவில்லை; இறுதியில் தொடர்ச்சியற்று முடிந்து விடுகின்ற இந்த அறிமுகத்தைக்கூட அவர் முடிக்கவில்லை; ஆனால், இன்றளவிலும்கூட தோழர் ஏங்கல்ஸின் மிக முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.*

 *‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு’* என்ற தலைப்பிலான நிலா விழியனின் இந்தப் புதிய தமிழாக்கம் நாம் அந்தப் படைப்பைப் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருக்கும்.