Sunday, October 5, 2025

ஏங்கெல்ஸ் நூல் - முன் வெளியீட்டுத் திட்டம்

           தோழர் ஏங்கல்ஸ் ‘Die drel Grandforemen der Knechhishaft - Outline of the General Plan’ (பொதுத்திட்டத்தின் வரைபடம்) என்ற தலைப்பில் ஒரு பெரும்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். ‘The Part played by Labour in the Transition from Ape to Man’ என்ற இந்தக் கட்டுரை அந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும் விருப்பத்துடன் எழுதப்பட்டது. அவர் அந்தப் பெரும்படைப்பை எழுதி முடிக்கவில்லை; இறுதியில் தொடர்ச்சியற்று முடிந்து விடுகின்ற இந்த அறிமுகத்தைக்கூட அவர் முடிக்கவில்லை; ஆனால், இன்றளவிலும்கூட தோழர் ஏங்கல்ஸின் மிக முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு’ என்ற தலைப்பிலான நிலா விழியனின் இந்தப் புதிய தமிழாக்கம் நாம் அந்தப் படைப்பைப் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருக்கும்.

32 பக்கங்கள் இருக்கக் கூடிய இந்தச் சிறுநூல் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகின்றது. ரூபாய் 30 விலையுள்ள நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின்கீழ்…

100 பிரதிகள் வாங்கினால் 30% கழிவுடன் (ரூபாய் 21x100=2100) பதிப்பகத்தின் செலவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும், உங்கள் முகவரிக்குக் கூரியரில் அனுப்பப்படும்.

50 பிரதிகள் வாங்கினால் 20% கழிவுடன் (ரூபாய் 24x50=1200) பதிப்பகத்தின் செலவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும், உங்கள் முகவரிக்குக் கூரியரில் அனுப்பப்படும்.

முன் பணம் அனுப்புவதற்கான கடைசி தேதி 2025 அக்டோபர் 25 (25/10/2025)

G-Pay எண் 9443184050

பணம் அனுப்பியதற்கான திரைப்படிமமும் (screen shot) முகவரியும் அதே எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment